குடிமகனின் கோரிக்கை- பேருந்தின் முன்பு படுத்துக்கொண்டதால் பதற்றம்....

குடிமகனின் கோரிக்கை- பேருந்தின் முன்பு படுத்துக்கொண்டதால் பதற்றம்....

பெண்களுக்கு வழங்கப்பட்ட பேருந்து இலவச கட்டணத்தை போலவே, எங்களுக்கும் வழங்க வேண்டும் என பேருந்தின் முன்பு படுத்து உருண்ட குடிமகனால் போபிசெட்டிப்பாளைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Published on

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தாயராக இருந்தது. அப்போது அங்கு திடீரென மதுபோதையில் இருந்த குடிமகன் ஒருவர் பேருந்தின் முன்பு படுத்துக்கொண்டு என்ன தாண்டி போயிடுவியோ அப்படினு சொல்ற மாதிரி, அங்கேயே படுத்து உறங்க ஆரம்பித்தார்.

வழியில் படுத்து கொண்டு வழிவிடாமல் தொல்லை செய்த குடிமகனை கண்டு பேருந்தில் இருந்தவர்கள் ஒருபுறம் சிரித்தாலும் மறுபுறம் கடுப்புற்ற ஓட்டுநர் பேருந்தைவிட்டு இறங்கி வந்து வழியில் படுத்து கிடந்த குடிமகனை எழுப்பி பேருந்தை வழிமறித்ததன் காரணத்தை கேட்டார். அதற்க்கு பதிலளித்த குடிமகன் அரசு பேருந்துகளில் செல்ல பெண்களுக்கும் மட்டும் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வழங்கப்பட்ட பேருந்து இலவச கட்டணத்தை போலவே தங்களுக்கும் வழங்க வேண்டுமெனவும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நஞ்சகவுண்டன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது. ஆகையால் அரசிற்க்கு வருமானம் தரும் தங்களை போன்றோரை பேருந்துகளில் இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்த போது ஒருவர் மட்டும் சென்று குடிபோதையில் உள்ளவர்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com