கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினிடையே மோதல்...! ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்....!

கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினிடையே மோதல்...!  ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்....!
Published on
Updated on
1 min read

மே ஒன்றாம் தேதியான  நேற்று கிராமப்புறங்களில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அடுத்துள்ள கள்ளிக்குடி தாலுகா உட்பட்ட கே உன்னிப்பட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் சாரதா தேவி செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். 

இக்கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் அதற்கு சாரதா தேவி உரிய விளக்கமானது அளிக்கப்பட்டு கொண்டிருந்தார். அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக உறுப்பினருமான ரவிச்சந்திரன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர், இந்த வாக்குவாதம் முற்றி ஊராட்சி மன்ற தலைவர் சாரதா தேவியின் கணவர் தரப்பினருக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், அது கைகலப்பாக மாறியது.

இந்த சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாரதா தேவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த  புகாரின்  அடிப்படையில் கள்ளிக்குடி 
போலீசார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேர் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே ஏற்பட்ட முதல் காரணமாக கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com