திருநள்ளாறில் பாஜக சார்பில் தூய்மைப்பணி!

Published on
Updated on
1 min read

பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் திருநள்ளாறு கோயில் வெளிப்புற தூய்மைப்பணி நடைபெற்றது.

நாடு முழுவதும் ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மை பணியை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தல் படி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் சுற்றுப்புற பகுதிகளை பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. 

மாநில பாஜக துணைத் தலைவர் ஜி என் எஸ் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமான பாஜக பொறுப்பாளர்கள் இளைஞர் அணிகளை சார்ந்தவர்கள் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்ட தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com