கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து மீண்டும் அவர் கரூரூர்க்கு செல்லவில்லை. தற்போது இன்று முதல்வர் விஜய் கரூர் மக்கள் மத்தியில் பேசினார். மேலும், "எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், சிலருக்கு சில காயங்கள் இருக்கும் அதுபோலத்தான் எனக்கு கரூர் சம்பவம்" என்று பேசத்தொடங்கினார். மக்களின் பிரச்சனையை கேட்பதைக்காகவே பல மாவட்டங்களுக்கு சென்றதாகவும் அப்படித்தான் கரூருக்கு வந்ததாகவும் முதல்வர் பேசினார். பெரம்பலூர் செல்வதற்கு முன்பே பெரம்பலூர் போலீசார் 'அலர்ட்' செய்ததாக அவர் கூறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கே செல்லவேண்டாம் என்று கேட்டுவந்ததாகவும், போலீசார் சொன்னதை தட்டமுடியாது என்பதால் அங்கிருந்து மனவலியோடு திரும்பி சென்றதாகவும் முதல்வர் கரூர் கூட்டத்தில் பேசினார்.
"அதேபோல் நாமக்கல்லில் கூட்டத்தினை முடித்து வந்தபோது கரூர் போலீசார் ஏன் எச்சரிக்கை செய்யவில்லை? போலீசார் நினைத்திருந்தால் அந்த கூட்டத்தையே களைத்திருக்கலாம். எங்களிடம் கேட்கவேண்டும் என்று அவசியம் கூட இல்லை. ஆனால், போலீசாரே எங்களை உள்ளே கூட்டிவந்த நாடகம் இருக்குதே.. முழுசா நம்பிட்டேன்" என்று பேசினார். அந்த கரூர் கூட்டத்தில் போலீசாருக்கு நன்றி எல்லாம் தெரிவித்ததாகவும் அவர் பேசினார். ஆனால், இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் மக்கள் முன்னிலையில் பேசினார். "இதற்கு எல்லாம் யார் காரணம்? யார் சொல்லி செய்தது?" என்று மக்களிடம் பேசினார் முதல்வர் விஜய்.
"இப்படி நடந்தால் இப்படி செய்யசொல்லியும், அப்படி நடந்தால் இவ்வாறு செய்யலாம் என்றும் யார் அழுத்தம் கொடுத்து செய்தார்கள்" என்று மக்கள் முன்னிலையில் பேசினார். மேலும்," இந்த கரூர் சம்பவத்தில் நாம் இழந்தது டிவி-யில் எனது படம் வந்தால் அம்மா விஜய் மாமா என்று ஆசையாக காட்டி முத்தம் கொடுத்த, என் அக்கா, தங்கைகளின் தங்கபிள்ளைகளை இழந்திருக்கிறோம். கள்ளம்கபடம் இல்லாத கடவுள் போன்ற குழந்தைகளை இழந்திருக்கிறோம்" என்று பேசினார். மேலும் "அக்கா, அண்ணன், என் தங்கைகளை இழந்து வாடும் என்னை ஏளனமாக பேசுகிறீர்கள்" என்றும் "இது ஏன் நடந்தது? எதனால் நடந்தது? என்பது போன்ற கேள்விகளோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று பேசுகிறீர்கள், வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்" என்று காட்டமாக பேசினார்.
"அவ்வளவு மக்கள் கூட்டம் இருந்ததற்கு போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பது கொடுத்தார்களா?" என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். பழியை என்மீது போட்டு விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் பேசினார். மக்களை காக்கவைத்து அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் பேசிய நிலையில் ஏன் தாமதமாக அங்கு வர நேர்ந்தது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்