"இளைஞர்களின் மூன்றெழுத்து மந்திரம் விஜய்!" - கூடியது 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற கீர்த்தனா வெற்றிபெற்ற சான்றிதழை கொண்டு வராததால் பதவியேற்கவில்லை.
17வது  சட்டப்பேரவை
17வது சட்டப்பேரவை 17வது சட்டப்பேரவை
Published on
Updated on
2 min read

இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கோட் சூட்டுடன் வருகை தந்தார் முதலமைச்சர் விஜய். 2026 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் கூட்டணி ஆதரவிற்காக விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியோர்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியில் இருந்து விலகி நிபந்தனையுடன் கூடிய ஆதரவினை அளித்தனர். இதனையடுத்து, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இறுதியாக விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவினை தருவதாக கூறினர். அதனை தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் தவெக தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இதனையடுத்து நேற்று (மே 10) அன்று நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் C. ஜோசப் விஜய்.

இதனைத்தொடர்ந்து இன்று (மே 11), 17வது சட்டப்பேரவை கூடியது. இதில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றிபெற்ற சான்றிதழ்களுடன் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். அதிமுக-வினர் 2 அணிகளாகி பேரவைக்கு வருகை தந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரு அணியும் வருகை தந்துள்ளனர். புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள MLA-களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

"இன்னல்கள், தடைகளை எதிர்கொண்டு தவிடுபொடியாக்கிய முதலைமச்சர்" என்று தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு புகழாரம் சூட்டினார் தற்காலிக சபாநாயகர். மேலும், 'இளைஞர்களின் மூன்றெழுத்து மந்திரம் விஜய்'. கொள்கை தலைவர்கள் வழி நின்று பணியாற்ற முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் என்றும் புகழ்ந்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பமொழிகளான தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதோர் ஒன்றினை தேர்ந்தெடுத்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம் என்று தற்காலிக சபாநாயகர் கூறினார். இதனையடுத்து தனது உறுதிமொழிகளை வாசித்து பெரம்பூர் தொகுதி MLA-வாக பதவியேற்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அவரைத்தொடர்ந்து என். ஆனந்த் உறுதிமொழிகளை கூறி தி. நகர் MLA-வாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து வில்லிவக்கம் தொகுதி MLA-வாக பதவியேற்றார் ஆதவ் அர்ஜுனா. வரைத்தொடர்ந்து கே.என். செங்கோட்டையன் MLA-வாக பதவியேற்றார்.

இவர்களை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி MLA-வாக பதவியேற்றார். இவர்களையடுத்து போடி தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் MLA-வாக பதவியேற்றார். மேலும் ராஜ் மோகன், வெங்கடரமணன், K.K.S.S.R. இராமச்சந்திரன், கே. பி. அன்பழகன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இசக்கி சுப்பையா, சிவெ. கணேசன், டி.கே. பிரபு, ரா. நிர்மல்குமார், சக்கரபாணி, சிவி. மெய்யநாதன், சிவசங்கர், ந. சுப்பிரமணியன் ஆகியோர் MLA-வாக பதவியேற்றனர். இவர்களைத்தொடர்ந்து, திமுக சார்பில், செந்தில் பாலாஜி, கோவி. செழியன், சேகர் பாபு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் MLA-வாக பதவியேற்றனர். மேலும், தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற கீர்த்தனா வெற்றிபெற்ற சான்றிதழை கொண்டு வராததால் பதவியேற்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு MLA-வாக பதவியேற்று வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com