
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது.
இந்நிலையில் அணையில் போதுமான அளவு நீர் இருப்பதைத் தொடர்ந்து, உடனடியாக , கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, பாசன பரப்பான 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் தண்ணீரை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.