சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி மூலம் ஆத்தூர் தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சொந்தமாக வீடு கட்டுவதற்கு கடனுதவி கேட்டு ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கூட்டுறவு வங்கியின் தலைவர் இராமதாஸ் கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் முதல் கட்டமாக 3 ஆயிரம் ரூபாயை இராமதாஸிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.