இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அபி பிரசாந்த். 21 வயதான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏவின்தாமஸ் என்பவரும், ஏற்காட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு ஏற்காட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த 20- ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செல்லும்போது சாலையோரம் இருந்த பாறையின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த அபிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com