ரயில் ஏறும் போது தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!

Published on

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது வேகமாக வந்து ஏறச்சென்ற கல்லூரி மாணவன் கால் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.  

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் தொடர்வண்டி புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயிலில் ஏறச்சென்ற மாணவர் ஒருவர் வேகமாக ஒடிச்சென்று ஏற முற்பட்டார். அப்போது அவர் கால் தவறி விழந்தார். இதில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் ரயிலில் ஏறச்சென்று படுகாயம் அடைந்த நபர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் நேதாஜி என்பதும் தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அவர் படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com