உணவு தட்டுடன் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...!

உணவு தட்டுடன் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி உணவு பாத்திரத்துடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் அருகிலுள்ள அரசு அம்பேத்கர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் உணவு தட்டுடன் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின்போது, மாணவர்களுடன் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பேசிய மாணவர்கள், தரமான உணவு  வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தங்களை, வார்டன் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மிரட்டும் தோணியில் அடிக்க பாய்வதாகவும் புகார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com