திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு...பகிரங்க மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன்...!

திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு...பகிரங்க மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன்...!
Published on
Updated on
1 min read

பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவிற்கு மிரட்டல் விடுக்கும் விதமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்தும்,  பா.ஜ.க பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை சிம்சனில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர்களான கருணாநாகராஜன், வி பி துரைசாமி உள்ளிட்ட பா ஜ க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்ணல் பாண்டியன், ”இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் எனவே  நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறி கொலை செய்துள்ளார்.

திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ஆனால், இராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள், பாம் வைக்க தெரிந்தவர்கள். எனவே, இது போன்ற செயல்களில் இனி ஈடுபட்டால், நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என்று பகிரங்கமாக பேசினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com