
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ரோபோ சங்கர்.
சின்னத்திரையிலிருந்து படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரைக்கு சென்றார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு தனுஷின் ‘மாரி’ திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பல முக்கிய நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.
இதனிடையே நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் உடல்நலம் சிறிது முன்னேறி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார்.
இந்த சூழலில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் 'காட்ஸில்லா’ படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உள்ளார். இவரை உடனடியாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.