கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடித்ததற்கு காரணம் சொல்லிய அமைச்சர்!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடித்ததற்கு காரணம் சொல்லிய அமைச்சர்!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் அருகே இருந்த உணவகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பரவிய தீ காரணமாகவே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, அரசு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பரவிய தீ காரணமாகவே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதாக விளக்கமளித்தார். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களை முறைப்படுத்துவது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com