அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார்...?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மீது காவல் நிலையத்தில் புகார்...?
Published on
Updated on
1 min read

அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் கடந்த 20-ம் தேதி சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.  

அதில் அவர்  தமிழக ஆளுநரை மிகவும் தரைக்குறைவான வார்த்தைகளால் மேடையில் பேசியதோடு மட்டுமின்றி தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களை தூண்டிவிடும் வகையிலும், வன்முறை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்.  

எனவே இது குறித்து உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள எக்ஸ்பிளனேட் காவல் நிலையத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் நேற்று புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ” தமிழக ஆளுநரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமன்றி ஆளுநர் வயதில் மூத்தவர் என்றும் பாராமல், அவரை ஒருமையில் பேசியதோடு, மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது”, என்றார்.

மேலும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com