முடிவடைந்த பட்ஜெட் தாக்கல்....!!!

முடிவடைந்த பட்ஜெட் தாக்கல்....!!!
Published on
Updated on
1 min read

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.   காலை 10 மணிக்கு உரையை தொடங்கிய நிதியமைச்சர் மதியம் 12 மணி வரை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.  அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு இன்றைய பட்ஜெட்டுடன் சட்டப்பேரவை முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்க தமிழ் வெல்க தமிழ்நாடு எனக் கூறி பட்ஜெட் உரையை முடிவு செய்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com