டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாமை நடத்துங்க- வானதி சீனிவாசன் நூதன கோரிக்கை

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். 
டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாமை நடத்துங்க- வானதி சீனிவாசன் நூதன கோரிக்கை
Published on
Updated on
1 min read

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். 

பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கோவை புலியகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது.இம்முகாமினை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இம்முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பிரதமரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெறுவதாக தெரிவித்தார். இதில் அறுவை சிகிச்சைக்கு தேவையுள்ள பெண்களுக்கும் பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளாத கூறினார். மேலும் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்வதில் நேற்று இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளதாக தெரிவித்த அவர்  தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என கூறினார்.

எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com