வெளிநாட்டினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல்...!

வெளிநாட்டினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல்...!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் அரோவில் உள்ள இடத்திற்காக உள்ளூர் மக்களும், வெளிநாட்டினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வானூர் அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆரோவில் ஃபவுண்டேஷனுக்கு சொந்தமாக பலநூறு ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்கிரவாண்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர்  ஆரோவில் பகுதியில்  இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார்.  ஆனால், அந்த நிலம் ஆரோவில்லுக்கு சொந்தமானது என வெளிநாட்டினர் கூறி வரும் நிலையில் இன்று வேலி அமைக்கும் பணி நடந்தது. இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டதால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து கைக்கலப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்து  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். வெளிநாட்டினருக்கும் உள்ளுர்வாசிகளுக்கும் இடையே நடந்த மோதலால் ஆரோவில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com