அதிமுக-வில் நிகழும் பரபரப்பு ! "சூடு பிடிக்கும் அரசியல் களம்" - சி.வி. சண்முகம் தலைமையில் நடக்கும் அதிமுக MLA கூட்டம்

தற்போது விசிக சார்பில் இடதுசாரிகளைப் போன்று நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறப்பட்டுள்ளது.
அதிமுக சி.வி. சண்முகம் தலைமையில் ஆலோசனை
அதிமுக சி.வி. சண்முகம் தலைமையில் ஆலோசனை அதிமுக சி.வி. சண்முகம் தலைமையில் ஆலோசனை
Published on
Updated on
1 min read

தற்போது அதிமுக-விற்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் தவெக 108 இடங்களை வென்று வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஆளுநர் விஜய் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் இருந்து வருகிறார். தவெக ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டி கட்சி தலைவர் விஜய் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் திமுக கூட்டத்தில் இருந்து விலகி தவெக-வுடன் இணைந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது.

இவர்கள் திமுக-வை விட்டு விலகியது திமுக-வினர் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், திமுக-வின் பல முக்கிய புள்ளிகள் காங்கிரசை கடுமையாக சாடி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் தங்களை 'முதுகில் குத்திவிட்டது' என்றும் அவர்கள் விமர்சனங்களை வைத்தனர். இதன் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவினை தவெக-விற்கு வழங்கினர். மேலும், வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் அவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. மேலும், தற்போது விசிக சார்பில் இடதுசாரிகளைப் போன்று நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறப்பட்டுள்ளது. விசிக சார்பிலும் வெளியில் இருந்து தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக கூறப்பட்ட நிலையில் தவெக-விற்கு 118 இடங்கள் தற்போது கிடைத்துள்ளது. பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட நிலையில் விஜய் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு தனி ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பல அதிமுக MLA-க்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், எஸ்.பி. வேலுமணி, எம். ஆர். விஜயபாஸ்கர், லீமா ரோஸ், மரகதம் குமாரவேல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இதிலக் பங்கேற்றுள்ளனர். காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக MLA-க்கள் கூட்டம் நடந்ததற்கு மத்தியில் தற்போது சில முக்கிய அதிமுக அமைச்சர்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது தவெக-விற்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில் இவர்களின் இந்த ஆலோசனை நடத்திவருவது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com