பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடியதற்கு கண்டனம்...! தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா!

பேரறிவாளன் விடுதலையை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடும் நிலையில் கூட்டணியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். 
பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடியதற்கு கண்டனம்...! தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா!
Published on: 
Updated on: 
1 min read

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'உலகம் போற்றும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே எனது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.  

பின்னா் மாலை முரசு தொலைக்காட்சிக்கு பிரத்தேயகமாக பேட்டி அளித்த அவா், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டுவதை ஏற்கமுடியவில்லை. எனவே, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என அவா் தொிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com