தவெக கொள்கை அடிப்படையிலே சரி இல்லை!? 2026 -இல் திமுக இதை செய்தே ஆக வேண்டும்..! - மணி சொல்வது என்ன!!??

இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது....
vijay vs dmk
vijay vs dmk
Published on
Updated on
1 min read

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பத்திரிகையாளர் மணிஇடம் தவெக தமிழகத்தின் மாற்று சக்தியா என கேள்வி  எழுப்பட்டது, “தவெக மாற்று அரசியல் கிடையாது. அது பெரிய அளவில் சோபிக்கப்போவதில்லை.  விஜய் வெற்றி முகம் இல்லை அழிக்க கூடியவர் அவரிடம் உள்ள 15% ஆடுகளுக்கும், திமுக, அதிமுக, பாஜக, விசிக, நாதக ஓட்டுக்களை உடைக்க வல்லது. மேலும் விஜயிடம் முறையான கொள்கை இல்லை. அவர் கொள்கை எதிரி வேறு அரசியல் எதிரி வேறு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். உங்கள் கொள்கை தானே அரசியலாக இருக்க வேண்டும். அவரை தூக்கி வைத்து கொண்டாடவும் இல்லை, கீழே போட்டு மிதிக்கவும் இல்லை. அவர் நம்பிக்கையை உருவாக்கவில்லை. திமுக ஒரு ஆண்டுக்காவது தனது ஊழலை குறைத்து மக்கள் செல்வாக்கை பெற முயல வேண்டும். மக்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மீண்டும் மீண்டும் மக்கள் தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவதை நிறுத்த வேண்டும். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com