உதயநிதி தலைமையில் போக்சோ வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்...!

உதயநிதி தலைமையில் போக்சோ வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்...!
Published on
Updated on
1 min read

போக்சோ வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது.

போக்ஸோ வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், டி.ஜி பி சைலேந்திர பாபு, துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரி கலந்துக்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் போது உரிய சட்ட விதிகளை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும், பாதிக்கப்படும் சிறுமிகளை முதலில் மனதளவில் மீட்பதோடு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

மேலும், புகார்கள் மீது விசாரணை நடத்தி குற்ற வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பதோடு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது நீதிமன்ற உத்தரவுகளை காவல் துறையினர் பின்பற்றிட வேண்டும் எனவும், விரைந்து வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com