அனுமதி பெற்றாலும் மது அருந்த அனுமதி இல்லை.... செந்தில் பாலாஜி!!

அனுமதி பெற்றாலும் மது அருந்த அனுமதி இல்லை.... செந்தில் பாலாஜி!!
Published on
Updated on
1 min read

திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

திருமண மண்டபங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் அனுமதி பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  அதாவது திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியில்லை எனவும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானம் அருந்தலாம் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகளிலும் ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளிலும் மட்டுமே மது அருந்த அனுமதி எனக் கூறினார்.  

மேலும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள், நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே மற்ற மாநிலங்களைப்போல அனுமதி கேட்கப்படும்போது மட்டுமே அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com