
இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.
இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.
ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான ஆணவப்படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்றபிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.
கவின் படுகொலை!
பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், இவரது மனைவி மணி முத்தாறு பட்டாலியனிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் சுர்ஜித். இவர்தான் கவினை குத்தி கொலை செய்துள்ளார்.
கரணம் சுர்ஜித் அக்காவும், கவினும் பலகாலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தனது அக்காவோடு பேசக்கூடாது என பலமுறை கவினை எச்சரித்துள்ளனர் பலர். ஆனாலும் அவர் கேட்காமல் சுர்ஜித் அக்கா வேலை செய்யும் சித்த மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில்கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது சுர்ஜித் எச்சரித்துள்ளார்,சுர்ஜித் எச்சரித்துள்ளார், அப்போதும் கேட்காமல் அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான், அவரின் முகத்தில் மிளகாய் போடி போடு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, முதலில் தனியாக விசாரிக்கப்பட்டார், அவர் 1 மணி நேரம் காவல் நிலையத்தில் த்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமார் இருவர் இருவரும் குற்றவாளி பட்டியில் சேர்ப்பு.இந்த சம்பவம் தொடர்பாக 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சுர்ஜித்துக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக எவிடென்ஸ் அமைப்பு நடத்திய கள ஆய்வுகள் குறித்து கதிர் அளித்த பேட்டியில்,
"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது, உயர்ந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார். இருந்தும் சாதி எப்படி இயங்கியிருக்கிறது என பாருங்கள்.
இதுவரை முதலமைச்சர் வெளிப்படையாக இதை கண்டிக்கவில்லை. அஜித் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் கவின் கொல்லப்படுகிறார். அஜித் குடும்பத்திடம் சாரி கேட்ட முதல்வர் ஏன் இவர்களிடம் கேட்கவில்லை. நெல்லை காவல் ஆணையர் உள்ளிட்ட யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. அஜித்தும், நவீனும் ஒரே தரப்பு தான். ஆனால், அரசும் சமூகமும் இன்று சாதி பார்க்கிறது.
சுபாஷினியின் பெற்றோரை கைது செய்வதில் என்ன பிரச்சனை? எனக்கு இது தெரியாது என சுபாஷிணி சொன்னால் அவரும் குற்றம் செய்வதவராக கருதப்படுவார். காவல்துறை சார்ந்த குடும்பத்தில் இதுதான் முதல் ஆணவக்கொலை. அதனால் தான் வழக்கின் நேர்மையான விசாரணை கருதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கவினின் குடும்பத்திற்கு தெரியாமலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே, நீதிபதி முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் இதுவரை விசாரிக்க வரவில்லை.பாதிக்கப்பட்ட நபர்கள் மீது அரசின் கருணை கொஞ்சம் கூட இல்லை.
ஆணவக்கொலை குற்றங்களுக்கு எதிராக தனிசட்ட வரைவினை ஏற்படுத்தி அவற்றினை சட்டமாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலை நடந்துள்ளது. எனவே, கண்டிப்பாக ஆணவகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் 2019ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஓசூர் நந்தீஷ் - சுவாதி கொலையின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனிச்சடம் இயற்றுவோம் என்றார். ஆனால், கடந்தாண்டு ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் தேவையில்லை என்கிறார். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலின நபர்களாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும். பிற சாதிகளில் நடக்கும் ஆணவ கொலைகளுக்கு பொருந்தாது. இதற்காக தான் ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் கேட்கிறோம்" என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.