
தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்து வருவது தொடர்பாக காவல்துறையினருக்கு எச்சரிக்கை தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் நெல்லையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று 05/08/25 காலை தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையில் கவுரங் சவ்டா (தனிச் செயலாளர்) திரு. சன்மித் கவுர் Dr.Stalin துணை இயக்குனர் (தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்) Dr.S. ரவிவர்மன் இயக்குனர் (தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சென்னை) திரு. N சுரேஷ் ஆராட்சி அலுவலர் / திரு.லிஸ்ட்டர் அவர்கள் முதுநிலை ஆய்வாளர். திரு மதன் டேப்சர்மா ஆய்வாளர் மற்றும் திருமதி சாமுண்டீஸ்வரி IG (SJHR) மற்றும் மாநகர ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி மற்றும் வினோத் சாந்தாரம் கிழக்கு துணை ஆணையாளர்ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆணவக் கொலை பற்றி விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆணையத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது “இந்த கொலையில் கொலையாளியின் தாயாரின் ரோல் என்ன மற்றும் இந்த கொலையில் வேறு யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் கண்டறிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தினோம்,
மேலும் தமிழ்நாட்டில் அடிக்கடி இந்த மாதிரி சாதி ரீதியிலான ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்குமாறும் போலீஸ் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலியான கவின் வீட்டுக்கு செல்கிறோம். அவருடைய பெற்றோரை பார்த்து அவர்களிடம் இந்த ஆணவ படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கவினின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்திற்கு இந்த குழுவினர் புறப்பட்டு சென்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.