தொடரும் தற்கொலைகள்.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ள மசோதா..!

தொடரும் தற்கொலைகள்.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ள மசோதா..!

இதில் சட்டசபையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
Published on

தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்

சட்டசபையின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் சட்டசபையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. இக்கூட்டத்தில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தொடரில் பங்கேற்காத ஈ.பி.எஸ்

முதல் நாள் சட்டசபை கூடிய போது  மறைந்த தலைவர்கள், இங்கிலாந்த் ராணி 2ஆம் எலிசபெத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்று நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சி துணை தலைவரான ஓ.பி.எஸ்

இரண்டாம் நாளான நேற்று சட்டசபை கூடிய போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அமளியில் ஈடுப்பட்டு சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த  காரணத்தினால் அன்று ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை எதிர்க்கட்சி துணை தலைவராக சபாநாயகர் அப்பாவு தேர்ந்தெடுத்தார்.அதற்கு பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்தான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

மூன்றாம் நாளான இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாடில் தங்களது பணங்களை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தொடர் தற்கொலைகளில் ஈடுப்படுவதையடுத்து , இந்த மசோதாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com