பாஜக கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியதால் சர்ச்சை.......

பாஜக கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியதால் சர்ச்சை.......

Published on

பொன்னேரி அருகே பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி காவல் நிலையம் எதிரே பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில், பாஜகவின் கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.  பொதுவாக கட்சி கொடி கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுவதில்லை. 

அதற்கென தனி கம்பம் அமைத்து தேசியக் கொடி ஏற்றப்படுவது வழக்கம்.  இந்நிலையில், பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com