தமிழகத்தில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 592 என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on
Updated on
1 min read

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 592 பேர் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 11 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 35 ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 607 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 282ஆக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 229-ஆக பதிவாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com