தமிழகத்தை மிரட்டும் கொரோனா தொற்று : தினசரி பாதிப்பு 1,600-ஐ நெருங்கியது

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு ஆயிரத்து 600-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தை மிரட்டும் கொரோனா தொற்று : தினசரி பாதிப்பு 1,600-ஐ நெருங்கியது
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் படிப்படியாக குறைய தொடங்கியது. அந்தவகையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

தொடர்ந்து வேகமாக குறைந்த தொற்று கடந்த நவம்பர் மாதம் முதல் ஆயிரத்துக்கு கீழ் வந்தது. கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தாக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் கொரோனா ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புத்தாண்டு தொடங்கிய நிலையில் கொரோனா பாதிப்பு உயர தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே 3-வது அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில்  நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128  ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பால் நேற்று 6 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று நேரத்தில் 624 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 5 ஆயிரத்து 34 பேர் மொத்தம் குணம் அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com