கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...சுகாதாரத்துறை அறிவிப்பு...

கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...சுகாதாரத்துறை அறிவிப்பு...
Published on
Updated on
2 min read

விமானம்  மூலம் வெளிநாடுகளில் இருந்து  தமிழகம் வரக்கூடியவர்களுக்கு இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருந்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை அறிவித்துள்ளது.



 பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் :

1)கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய வயதினார்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு விமானங்களில் பயணம் செய்ய வேண்டும். 

2)பயணத்தின் போது அறிகுறி உள்ள  பயணிகள் நிலையான நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும், பயணிகள் முக கவசம் அணிய வேண்டும், தனிமைப்படுத்தப்பட வேண்டும். 

3)விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும்  சுகாதாரத்துறை பணியாளர்கள் உடல் வெப்பநிலை செய்யப்பட வேண்டும். 

4)அறிகுறி உள்ள பயணிகளை ஸ்கிரீனிங்கில் தனிமைப்படுத்த வேண்டும்

5)சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின் படி விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மையம் இருக்க வேண்டும். 

6)விமானங்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பயணம் செய்த பிறகாக சுய கண்காணிப்புக்கு அறிவுறுத்தப்படும் .

7)அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள சுகாதார வசதி அல்லது மாநில உதவி எண் (104) க்கு தெரிவிக்க வேண்டும். 

 8)விமானம் வெளிநாடுகளில் இருந்து தியானமூலம் தமிழகம் வரக்கூடியவர்களுக்கு இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் விமான நிலையங்கள் பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com