தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கிய கள்ளச்சாராயம் கலாச்சாரம் - இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கிய கள்ளச்சாராயம் கலாச்சாரம் - இபிஎஸ் கண்டனம்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராயம் தலைதூக்க தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாரம் அருந்தி 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராயம் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்ததை சுட்டிகாட்டியுள்ளார். தொடர்ந்து மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துள்ள அவர், சிகிச்சை பெற்று வருவோரின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு அதிமுக  ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும் தற்போது நிகழ்ந்துள்ள 
கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com