"நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" - இணையத்தை கலக்கும் ராகுல் காந்தியின் போஸ்டர்!!

"நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" - இணையத்தை கலக்கும் ராகுல் காந்தியின் போஸ்டர்!!

Published on

மக்களைவியில் ராகுல் காந்தி எம்.பி ஆக தொடருவார் என அறிவித்ததை தொடர்ந்து கோவையில் சினிமா வசனத்துடன் ராகுல் குறித்த போஸ்டர் ஒட்டபட்டுள்ளது.

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்து வைத்தது. 

இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார். இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் கோவை மாநகரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைபடத்தில் இடம்பெற்றுள்ள பிரபல வசனமான " நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தெற்கு வட்டாட்சியர் அலுவலம் அருகிலும், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த போஸ்டரின் புகைப்படங்கள், அதிகளவில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com