“ஆக்ரோஷமாக சண்டையிட்ட மாடுகள்” - திடீரென வந்த பைக்.. குழந்தையுடன் கீழே விழுந்த தம்பதி! என்ன நடக்குது இங்க?

அருகில் உள்ளவர்கள் மாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை, விலக்கி விட முயற்சி செய்தாலும் மாடுகள், தொடர்ந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டிருந்தது.
sivagangai cow fight
sivagangai cow fightAdmin
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் பிரதான சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் அவல நிலை  தொடர்ந்து கொண்டு இருந்ததால் , பொது மக்கள் “உரிமையாளர்கள் பராமரிப்பு இன்றி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என”  கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, காரைக்குடியில் பிரதான 100 அடி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்குள் ஏற்பட்ட சண்டை, சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது ஆக்ரோஷமாக சண்டை போட்ட மாடுகள் சாலை ஓரத்தில் நின்ற இரு சக்கர வாகனங்களை முட்டி  தள்ளியது. 

அருகில் உள்ளவர்கள் மாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை, விலக்கி விட முயற்சி செய்தாலும் மாடுகள், தொடர்ந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டிருந்தது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக சாலை நடுவிலும் மாடுகளின் சண்டை தொடர்ந்தது. அப்பொழுது  அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றையை முட்டியது. சாமர்த்தியமாக ஆட்டோவை ஓட்டுனர்,  ஓட்டிச் சென்றுவிட்டார். 

தொடர்ந்து அவ்வழியே,குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை, சண்டையிட்டு மாடுகள் முட்டி தள்ளியது. இதனால் நிலை தடுமாறி குழந்தையுடன் தம்பதியினர் சாலையில் விழுந்தனர். உடனடியாக சுதாரித்த தந்தை கிழே விழுந்த  குழந்தையை தூக்கினார். இதனை கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் வாகனத்தை தூக்கி உதவி செய்தனர்.

வண்டியில் குறைந்த வேகத்தில் வந்ததால்,அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தம்பதியர் மற்றும் குழந்தை தப்பினர். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வப்போது  எதிர்பாராத விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருவதை தடுக்க காரைக்குடி மாநகராட்சி சார்பில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com