கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

நேற்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்ததார்.
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!
Published on
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு

தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக உள்ள நல்லகண்ணு அவர்களுக்கு 95 வயது. 1925 ஆண்டு ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தனது கட்சிப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நல்லகண்ணு.

குணமடைய வாழ்த்து

நேற்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்ததார். இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லக்கண்ணு, விரைந்து குணமடைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com