அமைச்சர் செந்தில் பாலாஜி மீது,.. குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது,.. குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு..!
Published on
Updated on
1 min read


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள இரண்டு வழக்குகளில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் மூன்று மோசடி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பிறகு அதில் ஒரு வழக்கில் மட்டும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது மீதமுள்ள இரு வழக்குகளில் மோசடி பிரிவுடன் சேர்த்து ஊழல் தடுப்பு பிரிவு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com