"பணம் பறிப்பதுதான் கிறிஸில்டாவின் நோக்கம்.." மௌனம் கலைத்த மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி!!

நான் எனது கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதிவரை ....
madhampatty rangaraj family issue
madhampatty rangaraj family issue
Published on
Updated on
3 min read

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், ஜாய் கிறிஸில்டா ஜில்லா, மிருதன், ரெக்கை உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், தனது உறவுக்கார பெண்ணான சுருதி பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அவரால் பலமுறை கர்ப்பமடைந்து கருக்கலைப்பு நிகழ்ந்ததாகவும், இம்முறை கருவை கலைக்க மறுத்ததால், தன்னையும் குழந்தையும் விட்டு சென்றுவிட்டார் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் கிறிசில்டா புகார் அளித்திருந்தார்.

மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களையும், 7 மாத கர்ப்பிணியான தானும் இந்த குழந்தையும் போராடிக்கொண்டிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் மிகவும் உணர்வு பூர்வமாக பதிவிட்டிருந்தார். இவர்களின் இந்த சர்ச்சையான உறவால், ரங்கராஜ் தனது முதல் குடும்பம் மற்றும் பொதுவெளியில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதாகவும் பேசப்பட்டது. 

ஆனாலும், ஜாய் கிறிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜன் மீது அடுத்தடுத்து புகார் கொடுத்து வந்தார். மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்துகொண்டு  ஏமாற்றி விட்டார் என்று கொடுத்திருந்த புகாருக்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்தான் கர்ப்பிணியாக இருப்பதால் தன்னுடைய குடும்ப செலவு மற்றும் மருத்துவ செலவுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு மாதம் ஆறரை லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்ற மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தான் அவருக்கு 31 -ஆம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்த ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பி அவரை நேரில் வரவழைத்தது. மகளிர் ஆணையத்தில் இருவரும் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். 

இந்நிலையில் கடந்த நவம்பர் 4 -ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக மகளிர் ஆணையம் அறிக்கையும் வெளியிட்டிருந்தது. ஆனால் மகளிர் ஆணையம் முன்பு தான் ஜாய் கிறிசில்டா திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கா ராஜ் ஒப்புக்கொண்டார். புகார்தாரரான ஜாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தை தான்தான் என்பதையும் DNA சோதனை எல்லாம் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மகளிர் ஆணையம் இது தொடர்பான ஒரு அறிக்கையையும் வெளியிட்டு இருந்தது.

ரங்கராஜ் மறுப்பு 

ஆனால் அடுத்த நாளே இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து மாதமபட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதி, “நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்துகொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.

நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன், ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால் இதற்கு ஜாய் பதிலடியாக வீடியோக்களை வெளியிட்டிருந்தார், பிறந்த பச்சை குழந்தையை இப்படி பேசுகிறாயே எங்கள் பாவம் உங்கள் குடும்பத்தை சும்மா விடாது.. நீ எல்லாம் ஒரு அப்பனா? என கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த சலசலப்புக்கு மத்தியில் இதுநாள் வரை அமைதி காத்து வந்த, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி சுருதி பிரியா ஒரு பதிவை போட்டுள்ளார், அவரது பதிவில், " மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, ஜாய் கிறிஸில்டாவிடமிருந்து முறையற்ற, அவமதிப்பான மெசேஜ்களை பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை வேடத்தை காட்டிவிட்டது. அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்கிறார். ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாகி உள்ளது. அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் -"எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது” 

  1. ரங்கராஜ் எனது பொருளாதார தேவைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.

  2. ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ப்ரியாவை விவகாரத்து செய்ய வேண்டும். 

  3. எனக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும்.

  4. சமூகத்தின் முன்னிலையில் என்னை மனைவியாக அறிவிக்க வேண்டும் 

இதிலிருந்தே தெரிகிறது அவரின் நோக்கம் பணம் பறிப்பதும் அவரின் சட்டபூர்வமான மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வதுமே ஆகும். நான் எனது கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதிவரை காப்பாற்றுவேன்” என பதிவிட்டு ஜாய் தனக்கு அனுப்பிய மெசேஜ்களையும், ஒரு கடிதம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இத்தனை பஞ்சாயத்துகளுக்கு பிறகு அவர் தற்போது தான் மவுனம் கலைத்து பேசியுள்ளார். ஆனால் ஜாய் மீது மக்களுக்கு இருந்த அபிப்ராயத்தை ஸ்ருதியின் பதிவு அசைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com