கடலூரில் மின்கம்பி அறுந்து விழுந்து எரிந்ததால் அதிர்ச்சி.... அதிகாரிகளின் அலட்சியமே காரணம் - குற்றம்சாட்டும் பொதுமக்கள்.

கடலூரில் மின்கம்பி அறுந்து விழுந்து எரிந்ததால் அதிர்ச்சி.... அதிகாரிகளின் அலட்சியமே காரணம் - குற்றம்சாட்டும் பொதுமக்கள்.
Published on
Updated on
1 min read


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தெருவில் இன்று காலை தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து விழுந்து ஒன்றோடு ஒன்று உரசிதால் தீ பற்றி எரிந்தது. அப்பொழுது அப்பகுதியில் யாரும் அதிர்ஷ்டவசமாக ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் இல்லாமல் தப்பினர்.

இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள்  அதிர்ச்சி அடைந்து  மின் துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மின் துறை அதிகாரிகள் அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்து அறிந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்தனர்.

ஏற்கனவே அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் ஆபத்தான வகையிலும் உள்ளதாகவும் மின்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தும், அதிகாரிகள்  தாழ்வாக சென்ற மின் கம்பிங்களை சரி செய்யாமல் அலட்சியம் காட்டியதால்  இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் பல இடங்களில் இதே நிலை உள்ளதாகவும் ஆபத்து ஏற்படும் முன்னரே  மின்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் எனவும்  கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com