சங்கிகளின் அரசியலுக்கு சாவுமணி: திசம்பர் 12 தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் நினைவுநாளில் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சட்டமாமதைக்கு காவி உடை அணிந்தும் நெற்றியில் பொட்டு வைத்தும் போஸ்டர் ஒட்டியதை தொடர்ந்து தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் ..
சங்கிகளின் அரசியலுக்கு சாவுமணி:  திசம்பர் 12 தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

டிசம்பர் 6 அம்பேத்கரின்  நினைவுநாளில் காவி சாயம் பூசி போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சியினரை கண்டித்தும் உயர்நீதிமன்றத்தை அவமதித்தை தொடர்ந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகமெங்கும் டிசம்பர் 12 ஆர்ப்பாட்டம் 

திருமாவளவன்  டுவிட்டர் பதிவு 

1)தனது இறுதி மூச்சுவரை
எந்த அடையாளத்தை உதறி எறிவதற்காக தன் வாழ்வைப் பணயம் வைத்தாரோ, 
அந்த மாமனிதர் அம்பேத்கரின் நல்ல நோக்கத்தைச் சிதைக்கும் வகையில், அதே அடையாளத்தை அவர்மீது திணிப்பது அநாகரிக
அற்ப அரசியல்! 

சங்கிகளின் அரசியலுக்கு சாவுமணி அடிக்க வேண்டாமா?
திச12 -ஆர்த்தெழுவோம்! 

2) சாதி, மத அடையாளங்களுக்குள் சிக்காத சமத்துவச் சிந்தனையாளர்,
அகிலம் போற்றும் பேரறிவாளர் அய்யன் திருவள்ளுவருக்கு மதவாத அடையாளத்தைத் திணிக்கும் மூடர்களின் சனாதன இழிசெயல்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டாமா? #திச_12 தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம். 
அணி திரளுவோம்! -சாதி,மத
அடையாளம் உதறுவோம்! என பதிவிட்டியிருக்கிறார்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com