ராணுவ வீரர்கள் குறித்து அவதூறு. நாம் தமிழர் கட்சியை சார்ந்தவரை கைது செய்ய எஸ்பியிடம் மனு

ராணுவ வீரர்கள் குறித்து அவதூறு. நாம் தமிழர் கட்சியை சார்ந்தவரை கைது  செய்ய எஸ்பியிடம் மனு
Published on
Updated on
1 min read

 ராணுவ வீரர்களை கொச்சையான வார்த்தைகள் பேசிய நாதக கட்சி

ராணுவ வீரர்கள் குறித்து கொச்சையான வார்த்தைகளில் பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை சரவணன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி முன்னாள் ராணுவ கூட்டமைப்பினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆதாரத்துடன் மனு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் கடந்த எட்டாம் தேதி இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை சரவணன் என்பவர் ராணுவ வீரர்கள் குறித்து கொச்சையான வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில்  நாட்டை பாதுகாக்கும் பணியில் எல்லையில் இரவு, பகல் பாராமல் உழைத்துவரும் ராணுவ வீரர்களின் ஒப்பற்ற சேவையை கொச்சை படுத்தும் வகையில் பேசிய
 சாட்டை சரவணன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய   நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் ராணுவ கூட்டமைப்பினர் சிடி ஆதாரத்துடன் புகார் மனு அளித்தனர்.

 நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக அளவிலான அனைத்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com