ஒன்றிய அரசின் சட்டதிருத்தத்தால் தொழிலாளர்களுக்கு ஆபத்து...தலையிடுமா தமிழ்நாடு அரசு!

ஒன்றிய அரசின் சட்டதிருத்தத்தால் தொழிலாளர்களுக்கு ஆபத்து...தலையிடுமா தமிழ்நாடு அரசு!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலார்களிடையே பரப்புரை

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 கன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 30 சென்னை வரை அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நலவாரியங்களை பாதுகாக்க கோரி பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்தப் பரப்புரை பயண இயக்கம் தூத்துக்குடி வந்தது. அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கீதா தலைமையில் வந்த இந்த பிரச்சாரம் பயணம் தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இடையே  பரப்புரையில் ஈடுபட்டது.

தமிழ்நாடு அரசு சட்டமியற்ற கோரிக்கை

அப்போது அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்து ஒரே தொகுப்பு சட்டமாக மாற்றி உள்ளது. இந்த தொகுப்பு சட்டத்தை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகள் உரிய நிதி ஒதுக்க வேண்டும், பட்ஜெட்டில் மூன்று சதவீதம் நிதியும், ஜிஎஸ்டியில் ஒரு சதவீத நிதியும் ஒதுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை பாதுகாக்க சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000 வழங்கிய தமிழக அரசுக்கு  இந்த பிரச்சார பயணத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com