“டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும்” - தமிழக அரசுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

“டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும்” -  தமிழக அரசுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்கும் படி அரசு மற்றும் தனியார் ஆய்வகத்திற்கு பொது சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் வருகின்ற 12ம் தேதி வரை தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டையில், பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் தலைமையில் பொது சுகாதார பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு முன்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எவ்வாறு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அதேபோல் அதற்கு பணியாளர்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று  விளக்கம் அளிக்கப்பட்டது. 

பேரணியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், 6 மணி நேரத்தில் டெங்கு பரிசோதனை முடிவுகளை வழங்க அனைத்து அரசு மட்டும் தனியார் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில்  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com