வேளாண் துறை, உழவர் நலத்துறை என பெயர் மாற்றம்..!!

வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.
வேளாண் துறை, உழவர் நலத்துறை என பெயர் மாற்றம்..!!
Published on
Updated on
1 min read

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.

அதில் வேளாண் துறையை உழவர் நலத்துறை என பெயர் மாற்றினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

வேளாண் என்ற சொல்லுக்கு உதவி என்று பொருள் என தெரிவித்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.

18 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னர் தான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டது 

நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும்

மங்கி வரும் மண்வளம், பற்றாக்குறையாகும் நீர்வளம் ஆகியவை பெரும் சவாலாக உள்ளன

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

உணவு தன்னிறைவில் தமிழகம் ஒரளவு எட்டியுள்ளது.

10 லட்சம் எக்டர் அளவு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டில் ஒரு மடங்காக உயர்த்தப்படும்

சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிப்பு

வேளாண் ஏற்றுமதியாளர்கள், வணிகர்களின் ஆலோசனைக்கு பின்னர் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும்

வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன்

- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com