1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கருணாசாகர் கும்பகோணம் ஏ எஸ் பி ஆக பணியை தொடங்கினார். பின்னர் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் கூடுதல் ஆணையர் வடக்கு, சிபிசிஐடி டி ஐ ஜி என பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் இவர் சென்னை எல் பணியாற்றிய போது போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் காவலர்கள் நலனை மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்த கருணாசாகர் கடைசியாக காவலர் நலன் பிரிவு டிஜிபி யாக பணியாற்றி வந்தார். குறிப்பாக தமிழக காவல்துறையில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டிஜிபி கருணாசாகர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெறுவதை ஒட்டி டிஜிபி கருணா சாகருக்கு தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை உடன் பிரிவு உபச்சார விழா நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, கமாண்டோ படை, தமிழ்நாடு ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று டிஜிபி கருணா சாகர் பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு டிஜிபி கருணாசாகர் தமிழக காவல்துறையில் சிறப்பான பணியை புரிந்து இருப்பதாகவும் குறிப்பாக காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டியதாகவும் அவர் தெரிவித்தார் அதிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைத்ததில் முக்கிய பங்கு கருணா சாகருக்கு உண்டு எனவும் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரச்சனை பூதாகரமாக இருந்த நிலையில் வட மாநிலங்களில் நன்கறிந்தவர் கருணாசாகர் என்பதால், அவர் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என வடமாநிலங்களில் கூறியது பெரும் உதவியதாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய டிஜிபி கருணாசாகர், ஸ்காட்லாந்து காவல்துறையை போல தமிழக காவல்துறையை கூறுவதால் அதில் ஐபி.எஸ் அதிகாரிகள் பெருமைப்பட கூடாது எனவும் இந்த நிலைக்கு கொண்டு வந்தது தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் தான் என அவர் கூறினார்.