விஜய்க்கு எதிராக தனுஷின் 'மாஸ்டர்' பிளான்.. ரசிகர்களை மோதவிடும் அரசியல் வியூகம்.. திமுக, அதிமுகவுக்கு செக்?

சாதி சார்ந்த வாக்குகள் குவியும் என சுற்றியிருப்பவர்கள் கூறினாலும் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் முன் தெளிவான திட்டத்துடன் தயாராக முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
Will Dhanush Face Off Against Vijay? The Battle Lines of Tamil Cinema's Next Big Political Move
விஜய்க்கு எதிராக தனுஷின் 'மாஸ்டர்' பிளான்.. ரசிகர்களை மோதவிடும் அரசியல் வியூகம்.. திமுக, அதிமுகவுக்கு செக்?AI Generated
Published on: 
Updated on: 
2 min read

நடிகர் தனுஷ் டெல்லி பயணம் அரசியல் வட்டத்தில் பேச்சுப் பொருளாக உருவெடுத்துள்ளது. அங்கு அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக ஒருங்கிணைத்து, ரசிகர்களை பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை தனுஷ் தீவிரப்படுத்தியுள்ளார். மன்ற கட்டமைப்பை மாவட்டம் - வட்டம் - பகுதி வாரியாக வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தனுஷின் பெயரில் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து, தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இத்துடன் டெல்லியில் அரசியல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்கள் மற்றும் தேசிய கட்சியின் முக்கிய புள்ளிகளை தனுஷ் சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசியலில் தீவிரமாக இயங்குவதற்கு முன்னர், ஆழம் பார்க்கும் விதமாக தனக்கு இருக்கும் செல்வாக்கு எந்த அளவில் வாக்காக மாறும் எனத் தெரிந்துகொள்ள தனுஷ் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

சாதி சார்ந்த வாக்குகள் குவியும் என சுற்றியிருப்பவர்கள் கூறினாலும் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் முன் தெளிவான திட்டத்துடன் தயாராக முடிவு செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவின் தூண்டிலும்.. தனுஷின் அதிரடி 'நோ'வும்!

தனுஷ் அரசியலை நோக்கி நகருவதைக் கண்டதும் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான அதிமுக சார்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தவெக தொடங்கப்பட்டபோது அதிமுக கூட்டங்களில் சிகப்பு மஞ்சள் கொடியுடன் இளைஞர்களை நிறுத்தி வைத்து நேரடியாகவே அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

TVK Flag in Pre-Election AIADMK Meeting
Pre Election AIADMK Meeting

திமுகவை எதிர்க்க கூடுதல் பலம் வேண்டும் என்பதை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். ஆனால் அந்த கூட்டணி அமையவில்லை. தனியாக நின்று 3வது இடம் பிடித்தார். அதிலும் 6 MLA-களை இழந்துள்ளார்.

இந்தநிலையில் கட்சியைக் காப்பாற்ற புதிய சக்தி வேண்டும் என்பதால் தனுஷுக்கும் தூண்டில் போட்டிருக்கிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் கூட்டி கழித்து கணக்கு பார்த்த தனுஷ் தரப்பு ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லை. தனிக் கட்சியாகவே பயணிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.

விஜய்க்கு எதிராக நேரடி யுத்தமா.. ஆன்மிக அரசியல் பாதை?

விஜய் கட்சி தொடங்கியபோதே சொல்லப்பட்டது போல தனுஷ் அரசியல் வருகைக்கு பின்னால் பாஜக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனுஷின் 'ஓம் நம சிவாய' மந்திரம் அவரும் ரஜினி வழியே ஆன்மிக அரசியலில் ஈடுபடலாம் என்ற கணிப்பை உருவாக்கியிருக்கிறது. இது தமிழகத்தில் பாஜகவுக்கு இனிமையான அரசியல் கொள்கையாகும்.

மேலும் தனுஷ் அரசியலில் ஈடுபட்டால் அவரது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த்தின் ஆதரவும் கிடைக்கும் எனக் கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தனித்து களமிறங்க உள்ள தனுஷ், விஜய்க்கு எதிரான அரசியலையே முன்னெடுக்க உள்ளார். அவரது மேடை பேச்சுகளில் பன்ச் டயலாக்குகள் மூலம் ரசிகர்களை ஈர்க்கிறார். தொண்டர்கள் எங்கள் தலைவர் 500 கோடி வசூல் செய்துள்ளார், எங்கள் தலைவர் தேசிய விருதுகள் வாங்கியுள்ளார் என சண்டையிடும் காலம் நெருங்குகிறது.

இந்தநிலையில் விஜய்யின் ஜோசியர் ரதன் பண்டிட் சமீபத்தில் கூறிய கருத்து கவனம் பெற்று வருகிறது.

ஜோசியரின் கணிப்பும், திமுகவின் சலசலப்பும்!

'தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவர் திமுகவின் இடத்தை நிரப்புவார்' என்று அவர் கூறியிருந்தார்.

தமிழக அரசியலில் எப்போதுமே இரண்டு முனை போட்டி என்பதுதான் இருந்துவந்துள்ளது. இதனால் திமுக தனுஷுக்கு இணையான செல்வாக்கு உள்ள நடிகரை தங்கள் பக்கம் இழுக்கலாமா அல்லது தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தலாமா என தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் இடத்தை நிரப்பினாலும் தனுஷ் வெற்றி பெற அது போதாது என்பதால் கூட்டணி யோசனைகளையும் வைத்துள்ளார். ஆனால் கூட்டத்தை காட்டும் வரை பேச்சுவார்த்தைகளை தள்ளி போடலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

அனைவரது கண்ணும் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் நிர்வாகிகள் சந்திப்பில் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும், தனுஷ் என்ன பேச உள்ளார் எனப் பார்க்க ஒட்டுமொத்த அரசியல் களமும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

Will Dhanush Face Off Against Vijay? The Battle Lines of Tamil Cinema's Next Big Political Move
"குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே.." – நாதக கார்த்திகா கைது.. தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com