தாராபுரத்தில் எடப்பாடி 'கம்பேக்..' தட்டி தூக்கும் அதிமுக.. தவழ்ந்து வரும் திமுக.. நிலைமை மாறுமா?

கடந்த பொதுத்தேர்தலின்போது 32.20% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த திமுக, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Dharapuram Election Results: AIADMK Comeback as DMK Slips to 3rd Place
தாராபுரத்தில் எடப்பாடி 'கம்பேக்..' தட்டி தூக்கும் அதிமுக.. தவழ்ந்து வரும் திமுக.. நிலைமை மாறுமா?
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் காலை 9:40 மணி நிலவரப்படி, அதிமுக 8,268 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தவெக 7,687 வாக்குகளுடன் உள்ளது. திமுக 6,103 வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

முதல் சுற்றில் தவெக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னேறி வருகிறது. தாராபுரம், மதுராந்தகம் என இரண்டு தொகுதிகளிலும் திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தாராபுரம் தொகுதியில் 80.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் இங்கு 89.9% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.58 சதவீதப் புள்ளிகள் வாக்குப் பதிவு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சரிவால் தவெக பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், தவெக இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள அதிமுகவைவிட வெறும் 600 வாக்குகளே குறைவாகப் பெற்றுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போது 32.20% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த திமுக, தற்போது 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாக்காளர்களின் மனநிலை மாறுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போதைய முன்னிலை நிலவரம் அடுத்தடுத்த சுற்றுகளில் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான சத்யபாமா, மரகதம் குமாரவேல் ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதனால், இருவருக்கும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், சத்யபாமா பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேவேளையில், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல் முன்னிலையில் உள்ளார்.

Dharapuram Election Results: AIADMK Comeback as DMK Slips to 3rd Place
தவெகவுக்கு மானப் பிரச்சனை.. பதட்டத்திலேயே வைத்திருக்கும் தாராபுரம்! அடுத்த 'மூவ்'க்கு தயாராகும் முதல்வர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com