அதிமுக வெளியிட்ட பதிவால் அதிர்ச்சி!.. “ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம்” - சீல் இல்லாத EVM இயந்திரமா?

இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றதுடன், அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது...
TVK Sathyabama Maragatham Kumaravel Wins
TVK Sathyabama Maragatham Kumaravel Wins
Published on: 
Updated on: 
2 min read

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளன. இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதற்கிடையே, அதிமுக வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 23-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 66,841 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள நிலையில் திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45, 280 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தவெக முன்னிலை பெற்ற நிலையில், இடையில் அதிமுக முன்னிலை பெற்றது. இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் சத்தியபாமா மீண்டும் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன் 50,649 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலும், இரண்டாவது இடத்தைப் அதிமுக வேட்பாளர் கணித சம்பத் 45,740 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றதுடன், அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தற்போது அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது, அக்கட்சியின் தேர்தல் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக முதலிடத்தையும் திமுக இரண்டாவது இடத்தையும் பிடித்திருப்பதால், இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்நிலையில் அதிமுக தனது அதிகாரபூர்வ பக்கத்தில் இன்பதுரை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் எனும் குற்றச்சாட்டு! - தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வரின் ரேக்ளா உலா - தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டிப் பயணம் மூலம் விலங்குகளை பயன்படுத்தி தேர்தல் விதிமுறை மீறல் என அடுக்கடுக்காய் எழுந்த புகார், தாராபுரம் அதிமுக வேட்பாளரை முடக்க அவர் மீது FIR பதிவு - டிபன் பாக்ஸ் மூலம் பணப்பட்டுவாடா என வரிசை கட்டும் சர்ச்சைகள்.

இதற்கெல்லாம் மேலாக, இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய பூத்களின் EVM-கள் செயலிழந்ததாகவும், பல EVM-களில் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்களின் குற்றச்சாட்டு - கேள்வி முகவர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் - தட்டிக் கேட்டு போராடிய சுயேச்சை வேட்பாளர் டாக்டர் மூர்த்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றம் என தொடரும் இத்தனை தேர்தல் முறைகேடுகளையும் மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்?” என் ஆளும் கட்சியை விமர்ச்சித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com