irfan_pathan_shahid_afridi
irfan_pathan_shahid_afridi

"நான் நாய் கறி சாப்பிட்டேனா?.. தைரியம் இருந்தால் இர்பான் பதான் என் முன்னால் வந்து பேசட்டும்" - கொந்தளிக்கும் அப்ரிடி

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் மீது கடுமையான ...
Published on

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான கைகுலுக்கும் சர்ச்சையில் தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி, மற்றொரு சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, நேருக்கு நேர் பேச வருமாறு அவருக்கு அப்ரிடி சவால் விடுத்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது அப்ரிடியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து இர்பான் பதான் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். “2006-ல் நாங்கள் கராச்சியில் இருந்து லாகூருக்கு விமானத்தில் பறந்துகொண்டிருந்தோம். இரு அணி வீரர்களும் ஒன்றாகப் பயணம் செய்தனர். அப்போது அப்ரிடி வந்து என் தலையில் கை வைத்து என் தலைமுடியைக் கலைத்தார். 'எப்படி இருக்கிறாய்?' என்று என்னிடம் கேட்டார்".

அப்போது, "அப்துல் ரசாக் அப்போது என்னுடன் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் இங்கு என்ன வகையான இறைச்சி கிடைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் வெவ்வேறு விலங்குகளின் இறைச்சி கிடைக்கும் என்று சொன்னார். அதன்பிறகு, நான் 'நாய் இறைச்சி கிடைக்குமா?' என்று கேட்டேன். இதைக் கேட்டு ரசாக் ஆச்சரியப்பட்டு, நான் ஏன் இப்படிக் கேட்கிறேன் என்று காரணம் கேட்டார். நான் அப்ரிடியைக் குறிப்பிட்டு, 'அவர் நாய் இறைச்சி சாப்பிட்டதால்தான் நாய் போலக் குரைக்கிறார்' என்று சொன்னேன்," எனப் பதான் வெளிப்படுத்தினார்.

பதான் கூறிய இந்தக் கருத்து, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலளித்த ஷாகித் அப்ரிடி, பதான் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று திட்டவட்டமாக மறுத்தார்.

சமா தொலைக்காட்சியில் பேசிய அப்ரிடி, “நேருக்கு நேர் நின்று பேசக்கூடிய ஒருவரை மட்டுமே நான் ஒரு போட்டியாளராக மதிக்கிறேன். பின்னால் இருந்து யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் நேரில் வந்து பேசக்கூடியவர்களை மட்டுமே நான் மதிக்கிறேன். அப்போதுதான் அது சுவாரஸ்யமாக இருக்கும், நானும் சரியான பதிலடி கொடுப்பேன்," என்று பதான் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆவேசமாகப் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com