சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா சிலகாலங்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, சசிகலா அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வரும் ஆடியோக்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அதிமுகவை தீவிர அரசியலுக்கு வருவேன், மீட்டெடுப்போம் போன்ற வாக்குறுதிகளை நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகிறார் சசிகலா.