கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.