வங்கக்கடலில் உருவாகிய டித்வா புயல் இலங்கையை அடித்து நொறுக்கிய கையோடு,தமிழகம் வந்தது. ஆனால் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும் பெரும் மழை பொழிவு எதையும் தரவில்லை. ஆனால் இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப் பொழிவை தந்து வருகின்றன.
அதிகாலை முதலே பெய்துவந்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும், சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இப்புயல், சென்னைக்கு புதிய மழை மேகங்களை தந்திருக்கிறது. இதனால் சென்னையில் நாளை வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னைக்கு அருகியிலேயே இந்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.