
தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தைராய்டு பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக துபாய் சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், விஜயகாந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் உடன் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து; "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.. நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என்று தெரிவித்துள்ளார்.